Page:Tamil proverbs.pdf/349

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
331
  1. தங்கம் புடத்தில் வைக்கப்பட்டாலும் தன் நிறம் போகாது.
    Though gold is put into the fire to be refined, its hue is not lost.

  2. தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.
    Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.

  3. தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
    To exchange all his gold for bran.

  4. தங்கைச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவான் ஏன்?
    If the child of his sister be his, why go to perform penance?

  5. தசை கண்டு கத்தி நாடவேண்டும்.
    The knife should be applied where there is flesh.

  6. தச்சன் பெண்சாதி தரையிலே, கொல்லன் பெண்சாதி கொம்பிலே.
    The wife of the carpenter is on the floor, and the wife of the smith is on the branch of a tree.

  7. தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?
    What if the wife of the carpenter is bereaved of her husband? what if the wife of the smith is deprived of her hire?

  8. தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?
    Will curds be found in the house of a carpenter, or boiled rice in that of a niggard?

  9. தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.
    O! Vellala do not long for the rice and milk in a carpenter’s house.

  10. தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.
    I walked about in all the entrances where the carpenter he had put up lintels, knocking my head against them.