Page:Tamil proverbs.pdf/355

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
337
  1. தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா?
    Can you efface the letters of destiny, written on the skull, by shaving the head?

  2. தலை எழுத்தை அரியென்று சொல்லுவார் அதல்ல.
    They call the writing on the head, Ari-Vishnu-it is not that.

  3. தலை கீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.
    Though one perform severe austerities, standing on the head, a thing cannot be attained before the destined time.

  4. தலைக்கு மேற்பட்ட தண்ணீர் சாண் ஓடி என்ன முழம் ஓடி என்ன?
    When the water flows over your head, what matters it whether it is a span or a cubit?
    In either case death is inevitable without help.

  5. தலைக்குத் தலை பெரியதனம் உலைக்கு அரிசி இல்லை.
    One is greater than the other, there is no rice to cook.

  6. தலைக்குத் தலை நாயகம்.
    Each aims to be the head.

  7. தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?
    Is it the head or the foot that is crowned?

  8. தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.
    If it ascend to the head, he will feel it.

  9. தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.
    You yourself have procured a firebrand to scratch your head.

  10. தலைச்சன் பிள்ளைக்காரிக்கு இடைச்சன் பிள்ளைக்காரி மருத்துவிச்சி.
    The mother of a second child is midwife to the mother of a first child.