Page:Tamil proverbs.pdf/362

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
344
பழமொழி.
  1. தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
    Do you condemn others when guilty yourself?

  2. தன் குஞ்சென்று வளர்க்குமாம் குயிற் குஞ்சைக் காகம்.
    It is said that the crow nourishes the young of a cuckoo, under the impression that it is her own.

  3. தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?
    Am I destined to be unlawfully abused while eating my own rice and wearing my own cloth?

  4. தன் நிலத்தில் இருந்தால் முயல் தந்தியிலும் வலிது.
    When in his own place a hare is stronger than a tusker-an elephant.

  5. தன் நோய்க்குத் தானே மருந்து.
    The remedy of his disease is with himself.

  6. தன் பலம் கண்டு அம்பலம் ஏறவேண்டும்.
    Having ascertained your own ability, display it in the assembly.

  7. தன் பணம் செல்லா விட்டால் தாதனைக் கட்டி அடிக்கிறது.
    When his own coin will not pass, he ties up and beats the Vaishnava mendicant.

  8. தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
    Can one take out his own teeth, and put them in another's mouth?

  9. தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசம் காட்டுகிறதுபோல.
    Like picking the teeth and holding the tooth-pick to the nose of another.

  10. தன் பிள்ளைக்குப் பதைக்காதவன் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
    Can she who does not feel for her own child, feel for the child of her rival?