Page:Tamil proverbs.pdf/364

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
346
பழமொழி.
  1. தன்னைப் புகழாத கம்மாளனும் இல்லை.
    There is no artificer who does not praise himself.

  2. தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
    He who has studied himself is his own master.

  3. தன்னை அறியாத சன்னதம் இல்லை.
    No excitement will make one forget himself.

  4. தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
    He who knows himself may know his maker.

  5. தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்கவேண்டும்.
    He who would keep himself must restrain anger.

  6. தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.
    You may kill even a cow that aims to kill you.

  7. தன்னைச் சிரிப்பாரை தான் அறியான்.
    He knows not who laugh at him.

  8. தன்னைப் பெற்றவள் கொடும் பாவி, பெண்ணைப் பெற்றவள் மகராசி.
    Despising his own mother as worthless, whilst holding his mother-in-law in high estimation.

  9. தன்னை அறிந்து பின்னைப் பேசு.
    Know yourself before you begin to speak of others.

  10. தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.
    It is said that the monkey of Palaveram does not know that he is laughed at.

  11. தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.
    It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself.