Page:Tamil proverbs.pdf/367

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
349
  1. தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.
    As is the mother such is the child, as is the yarn such is the cloth.

  2. தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறாள்
    The daughter reproached her mother and went astray.

  3. தாயைப் பார்த்து மகளைக் கொள்.
    Look at the mother before you take her daughter in marriage.

  4. தாய் அறியாச் சூல் உண்டோ?
    Is there any conception unknown to the mother?

  5. தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா?
    Is it right to strike a motherless child on the head?

  6. தாய் உறவோ நாய் உறவோ.
    A mother’s attachment, a dog’s attachment.

  7. தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.
    If the mother leaps seven feet, the daughter leaps eight.

  8. தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.
    She says that her mother is only a nut, while she herself is a grove of arica-nut trees.

  9. தாய் கேட்டுப்பட்டி தகப்பன் காவடிப்பட்டி தங்கை மோருப்பட்டி தமக்கை சாதப்பட்டி.
    The mother is wicked, the father vain, the younger sister a consumer of butter milk, and the elder sister a consumer of rice.

  10. தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.
    The bran in one’s own hand is preferable to the wealth in the hand of his mother.

  11. தாய்க்கு உள்ளது மகளுக்கு.
    That which is the mother’s, is the daughter's.
    This may refer to prosperity, temper, &c.