Page:Tamil proverbs.pdf/371

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
353
  1. தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.
    To get money they call themselves gurus, and perform pujas in honour of Sadasiva.

  2. தானே வளர்ந்து தவத்தால் கொடி எடுத்தவன்.
    He has grown great and distinguished by his penance.

  3. தானே வாழவேண்டும் தலைமகளே அறுக்கவேண்டும் என்கிறாள்.
    She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.

  4. தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.
    If he himself be under restraint, his race will be so.

  5. தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.
    An attempt to speak a language not understood may lead to one’s own hurt.

  6. தான் உள்ளபோது உலகம்.
    While one lives, the world subserves him.

  7. தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
    If he thinks one thing, Deity thinks another.

  8. தான் கள்வன் பிறரை நம்பான்.
    Himself a thief, he trusts not others.

  9. தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.
    What you have learnt, teach to others impressively.

  10. தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.
    Half was spoiled by himself, and half by his superior.

  11. தான் சம்பாதித்தால் தனக்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.
    That which one acquires will be available, that which the country acquires will not be so.