Page:Tamil proverbs.pdf/373

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
355
  1. தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.
    He says that the hare he caught had three legs.

  2. தான் போனால் தாகத்துக்குக் கிடையாது, எழுதடா ஓலை நூறு குடம் தயிருக்கு என்கிறான்.
    He says that if he go himself he cannot get water to quench his thirst, but if he sends written olas he can obtain a hundred pots of curds.

  3. தான் போகிற காரியத்துக்கு ஆட்போனால் ஒரு சொட்டு.
    Faults will happen if another be deputed to do one’s business.

  4. தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.
    It is said that he who went in person and could not obtain even butter-milk, sent a written order for curds.

  5. தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கல்விக்கொண்டு போனதாம்.
    It is said that a musk-rat that was not able to find its way out, carried away the broom.

  6. தான்றிக் காயில் சனியன் புகுந்ததுபோல.
    As if Saturn entered into the tánri fruit-Terminalia Bellerica,

தி.

  1. திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
    What has a naked mendicant to do with the friendship of a washerman?

  2. திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.
    He wanders about like one who has trodden on the tigai plant.
    A plant whose touch is supposed to create aberration of mind and numbness.

  3. திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.
    God is the help of the destitute.