Page:Tamil proverbs.pdf/380

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
362
பழமொழி.
  1. தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்யனவும் தீது.
    To associate with the wicked is bad, to serve the wicked is also bad.

  2. தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
    He who liberates the wicked injures the innocent.

  3. தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
    The thoroughly learned may become a religious guide.

  4. தீராக் கோபம் பாடாய் முடியும்.
    Unrestrained anger will end in mischief.

  5. தீராச் கோபம் போராய் முடியும்.
    Unrestrained anger ends in strife.

  6. தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.
    Continued uncertainty leads to war.

  7. தீராச் செய்கை சீராகாது.
    An unsettled affair is bad.

  8. தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
    God himself is the witness of the unquiet mind.

  9. தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
    God is the witness in an undecided cause.

  10. தீரா வழக்கு நேராகாது.
    An intricate case will never end satisfactorily.

  11. தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.
    A demon does evil to him who does evil to others.

து.

  1. துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?
    Why additional pain to a mind already in grief?