Page:Tamil proverbs.pdf/384

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
366
பழமொழி.
  1. துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.
    The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud.

  2. துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.
    Dwarf, do not jump, there is a ditch close by.

  3. துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.
    Do not leap about O lamb, the butcher's knife is in my hand.

  4. துள்ளின மாடு பொதி சுமக்கும்.
    The restive or unruly bullock will carry its load.

  5. துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
    Though one may exert himself to the utmost, he cannot procure even a silver fanam when fortune does not smile.

  6. துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
    By restlessness thou wilt throw thyself headlong.

  7. துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.
    The springing young deer fell into a well.

  8. துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
    Can that which is not reached by a long pole be seized by the hand?

  9. துறவறம் இல்லறம் மனதிலே.
    Ascetic and domestic virtues originate in the heart.

  10. துறவிக்கு வேந்தன் துரும்பு.
    A king is but a straw before an ascetic.

  11. துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.
    Men scare away crows because their cries are a nuisance, cuckoos they do not scare away.