Page:Tamil proverbs.pdf/394

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
376
பழமொழி.
  1. தொண்ணூறு கடனோடே துவரம்பருப்புக் காற் பணம்.
    With ninety debts, beans for a quarter of a fanam.

  2. தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
    With ninety gold fanams, one for beans.

  3. தொத்துக்குத் தொத்துச் சாட்சி துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி.
    A slave is a witness for a slave, a churn-staff is a witness for beans-cytisus cajan.

  4. தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.
    The food earned by the plough is sweeter than that obtained by serving others.

  5. தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமற் போமா?
    When sheep are penned, will not dung be found in the fold?

  6. தொன்மை நாடி நன்மை விடாதே.
    In your zeal for old forms neglect not what is really useful,

  7. தொன்மை மறவேல்.
    Forget not your former condition.

  8. தொன்னிலம் முழுதும் தோன்றிய கல்வி.
    Learning which is conspicuous to the whole world.

தோ.

  1. தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போயிற்று.
    The prospects of a gardener are destroyed by a gale.

  2. தோட்டத்தில் அந்தம்.
    It ends in the garden.

  3. தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?
    Will the jackal of the garden come into the assembly?