Page:Tamil proverbs.pdf/406

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
388
பழமொழி.
  1. நனைத்துச் சுமக்கலாமா?
    Would you wet your burden!

  2. நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகிற்குச் சேதம்.
    If the old man arive wet, there will be a consumption of dry fire wood.

  3. நன்மை செய்தார் நன்மை பெறுவார், தீமை செய்தார் தீமை பெறுவார்.
    Those who do good, obtain good; and those who do evil receive evil.

  4. நன்மை செய்யத் தீமை விளையாது.
    Evil will not spring from well-doing.

  5. நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.
    It is the greatest loss to destroy that which is good.

  6. நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.
    Good and evil are apparent in the present state.

  7. நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.
    To promote good and to diminish evil is the right way.

  8. நன்மைக் கடைப்பிடி
    Persevere in that which is good.

  9. நன்றாய் இருந்ததாம் நல்லிசுட்ட பணிகாரம்.
    The cakes prepared by Nalli are said to be excellent.

  10. நன்றி மறவேல்.
    Forget not a benefit.

  11. நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதைபோல.
    Like the story of killing a mungoose that had done well.
    The tale is-a mungoose seeing a deadly snake approach a sleeping infant, killed it. When the mother returned from the well she saw blood on the animal, and imagining that it had bitten her child she killed it.