Page:Tamil proverbs.pdf/408

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
390
பழமொழி.
  1. நாடு ஏர்ப்பன செய்.
    Do what is agreeable to the community.

  2. நாடு காடாயிற்று காடு கழனி ஆயிற்று.
    The country has become a jungle, and the jungle has becomes a fruitful field.

  3. நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.
    A delayed gift becomes the hire for walking to receive it.

  4. நாட்டாள் பெற்ற குட்டி நாகரீகம் பேச வல்ல குட்டி.
    The child of the peasant is able to speak elegantly.

  5. நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?
    Does a boor require a page?

  6. நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.
    Though the country has a good ruler, the scavenger is not relieved of his burden of grass.

  7. நாட்டுக்கு ஒரு மழை நமக்கு இரண்டு மழை.
    The country has received one downpour of rain, we have received two i., e., too much.

  8. நாணமும் இல்லை மானமும் இல்லை.
    No shame, no sense of honour.

  9. நாணம் இல்லாத வாத்திக்கு நாலு திக்கும் கூத்தி.
    Concubines on all sides to a shameless teacher.

  10. நாணம் இல்லாத கூத்திக்கு நாலு திக்கும் வாசல்.
    A shameless harlot has entrances on four sides.

  11. நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.
    An impudent woman gives occasion to be laughed at.