Page:Tamil proverbs.pdf/410

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
392
பழமொழி.
  1. நாயை அடிப்பான் ஏன் பல் இழிவு பார்ப்பான் ஏன்?
    Why beat a dogn, why make it grin?

  2. நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்?
    Why beat a dog and carry away his filth?

  3. நாயை ஏவ, நாய் வாலை ஏவுகிகிறது.
    When you command a dog, he commands his tail.

  4. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
    If we see a dog, there is no stone, and if we see a stone, there is no dog.

  5. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.
    If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.

  6. நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
    If you caress a dog, he will lick your mouth.

  7. நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.
    Like pelting a dog with cakes.

  8. நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
    Where there are dogs, there is quarreling.

  9. நாய் ஒரு சிறு எலும்புக்குச் சந்தோஷிக்கும்; அதுபோல, சிறியோர் சொற்ப காரியத்தை முடித்தாலும் சந்தோஷம் அடைவார்.
    A dog is pleased with a bone, in like manner the low are pleased with their own little acts.

  10. நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.
    The biting of a dog and the slippering of the wound to effect a cure are alike, painful.

  11. நாய் குலைத்து நத்தம் பாழ் ஆகுமா?
    Will the village be ruined by the barking of a dog?