Page:Tamil proverbs.pdf/415

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
397
  1. நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.
    Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.

  2. நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.
    The jackal is pleased with drizzling rain.

  3. நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.
    As the cat looks at the fish which has become putrid.

  4. நாறல் சாணியை மிதிப்பான் ஏன் நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
    Why tread on filth and waste good water in washing it off?

  5. நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?
    Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?

  6. நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
    A fetid body, a useless earthen vessel.

  7. நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.
    I have the command of four kalams of gruel.

  8. நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.
    Like a dog, if over forty.

  9. நானிலம் தன்னில் நாயகம் கல்வி.
    Learning is a gem when compared to the four kinds of soil.
    They are the hilly,-forest,-agricultural and maritime tracts of a country.

  10. நானும் நரைத்து நரைமண்டை ஆனேன் காடு நடக்கக் கண்டது புதினம்.
    I have lived long and become grey-headed, but I have not seen a moving jungle.

  11. நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.
    I indeed do not know; nor will she tell a lie.