Page:Tamil proverbs.pdf/420

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
402
பழமொழி.
  1. நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.
    I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.

  2. நினைக்குமுன் வருவான் நினைப்பதும் தருவான்.
    He will come before you think of him, he will give what you intend applying for.

  3. நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?
    Will heavy rain fall as we may wish?

  4. நினைத்தது இருக்க நினையாதது எய்தும், நினைத்தது வந்தாலும் வந்து நேரும்.
    When one thing is expected another may come, and that which is thought of may possibly come.

  5. நின்ற மரத்தில் நெடு மரம் போனால் நிற்கும் மரமே நெடுமரம்.
    When the lofty trees are felled, the remaining trees look tall.

  6. நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.
    The flood that was, has been swept away by the flood that followed.

  7. நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.
    When standing, a tall tree, when fallen, a palmyrah tree.

  8. நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.
    If you fall as you stand, your head will be broken.

நீ.

  1. நீசரானவர் நிலைபெறக் கல்லார்.
    The base do not persevere in study.

  2. நீட்டு வித்தை ஏறாது.
    Boasted learning will not avail.

  3. நீண்ட கை நெருப்பு அள்ளும்.
    The stretched hand will lade out fire.