Page:Tamil proverbs.pdf/428

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
410
பழமொழி.
  1. நேயமே நிற்கும்.
    Love alone will abide.

  2. நேரா நோன்பு சீர் ஆகாது.
    Fasting without a vow is not good.

  3. நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.
    Though repeatedly told, the base take no heed.

  4. நேர்பட ஒழுகு.
    Behave evenly or agreeably.

  5. நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.
    The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.

  6. நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.
    It is said that he took up his abode only yesterday, and he has been struck by lightning.

நை.

  1. நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.
    Naishadha is a cordial to poets.

  2. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
    Speak not roughly even to a beggar.

  3. நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.
    Though mollified by learning, speak effectively.

  4. நைவினை நணுகேல்.
    Go not near that which is pernicious.