Page:Tamil proverbs.pdf/430

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
412
பழமொழி.
  1. நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.
    Freedom from sickness is true happiness, and competence is true riches.

  2. நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.
    Like uttering soothing words to a sick person.

  3. நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்.
    If destiny favours the patient, his doctor will obtain fame.

  4. நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.
    The sick person knows the intensity of his suffering.

  5. நோய் கொண்டார் பேய்கொண்டார்.
    The sick are like those possessed of demons.

  6. நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.
    As a lean cat licks the churnstaff.

  7. நோய்த்த புலி ஆகிலும் மாட்டுக்கு வலிது.
    Though the chetah is sick, it is stronger than on ox.

  8. நோலாமையினால் மேலானதுபோம்.
    By neglecting religious austerities supreme good will be lost.

  9. நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற்போல.
    Like branding the side that is not affected by disease.

  10. நோன்பு என்பது கொன்று தின்னாமை
    Not to take life for the purpose of eating, is to fast.

நௌ.

  1. நௌவித் தொழில் நலம்.
    Youthful education will prove beneficial.

  2. நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.
    Know God when you are young.