Page:Tamil proverbs.pdf/436

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
418
பழமொழி.
  1. பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டதுபோல.
    Like fire touching a bale of cotton.

  2. பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.
    Like an arrow striking a bale of cotton.

  3. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
    Can cotton and fire be placed together?

  4. பஞ்சும் நெருப்பும்போலே.
    Like cotton and fire.

  5. பஞ்சை பணிகாரம் சுட்டதும், வீங்கல் விசாரப்பட்டதும்.
    The poor baked the cakes, the greedy longed for them.

  6. படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?
    If rulers err, who can abide on the earth?

  7. படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
    If the giver of the daily allowance be alive, no loss to the family.

  8. படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.
    To read Tiruváymoli, and to break down the temple of Vishnu.

  9. படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்கு தடிப்பாய் போம்.
    If a school boy chew betel, his pronunciation will be spoilt.

  10. படித்து முட்டாளாய் இருக்கிறான்.
    He is a learned fool.

  11. படித்தவனுக்கும் படியாதவனுக்கும், கொக்குக்கும் அன்னத்துக்கும் வித்தியாசம்போல.
    The difference between the learned and the unlearned, is as great as that of a crane and a swan.

  12. படுகளப்பட்ட பன்னாடை.
    A palm network driven in a battle-field.