Page:Tamil proverbs.pdf/45

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
27
  1. அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.
    He is aiming to conceal the rumour which is to be brought before the public assembly (for discussion.)

  2. அம்பலத்தில் கட்டுச்சோறு அவிழ்க்கிறாப்போல்.
    As boiled rice tied up for a journey is untied in an open place.

  3. அம்பலத்தில் பொதி அவிழ்க்கல் ஆகாது.
    It is not good to unpack in an open place.
    Unnecessary exposure of one’s personal affairs is to be avoided.

  4. அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.
    He speaks like piercing arrows.

  5. அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நாரிவால் கொள்ளுவார்களா?
    Will those who cross the river on a raft entrust themselves to the tail of a jackal?

  6. அம்மணமும் இன்னலும் ஆயுசுப்பரியந்தமா?
    Are nakedness and misery to continue to the end of life?

  7. அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
    Is a veil necessay for a woman in a bad condition?

  8. அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
    The father-in-law and son-in-law are slaves in the same house.

  9. அம்மான் மகளுக்கு முறையா?
    Why enquire after the relationship of the daughter of one’s maternal uncle?

  10. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா?
    Having to chastise a maid-servant in a father-in-law’s house, is it necessary to ask the chief permission to do so?

  11. அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?
    Whether is stronger, the grindstone or she who grinds?