Page:Tamil proverbs.pdf/452

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
434
பழமொழி.
  1. பன்றிபட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.
    If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.

  2. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
    The sow has many young ones at a time, the lioness only one.

  3. பன்றி பல குட்டி போட்டு என்ன?
    What, if a sow has a numerous litter?

  4. பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.
    A calf that goes with a pig will eat excrement.

  5. பன்னக்காரன் பெண்டில் பணியக் கிடந்து செத்தாளாம்.
    It is said that the wife of a mat-maker died on the bare ground.

  6. பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.
    Do not tell old stories with affectation.

பா.

  1. பாகற் கொட்டை புதைக்கச் சுரைக்கொட்டை முளைக்குமா?
    Will a bottle gourd spring from a págal seed?

  2. பாசம் அற்றவன் பரதேசி.
    He who has no ties is like a foreigner.

  3. பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.
    If the foot-ringed lady prosper, eight or ten people may be supported thereby.

  4. பாடம் ஏறினும் ஏடு கைவிடேல்.
    Though you have learnt your lesson, do not throw away your book.

  5. பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை.
    Though pounded with a song, chaff will not yield rice.

  6. பாடு என்றால் பாணனும் பாடான்.
    When pressed to sing, even the professional singer refuses.