Page:Tamil proverbs.pdf/454

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
436
பழமொழி.
  1. பாம்பின் வாய்த் தேரைபோல.
    Like a toad in the jaws of a snake.

  2. பாம்புக்கு மூப்பு இல்லை.
    Snakes have no chiefs.

  3. பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?
    When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?

  4. பாம்புக்கு இராசா மூங்கில் தடி.
    A bambu stick is king to a snake.

  5. பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?
    Are the enemies of snakes few?

  6. பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.
    Showing the head to snakes, and the tail to fish.
    Spoken of a two-faced person, in allusion to an eel that shows its serpent-like head to snakes, and its fish-like tail to fish.

  7. பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.
    Though you feed a snake with milk, it will yield poison.

  8. பாம்புக்குப் பால் வார்த்ததுபோல.
    Like pouring out milk to a snake.

  9. பாம்பும் கீரியும்போல.
    Lik a snake and a mungoose.

  10. பாம்பும் கீரியும்போலப் பல காலம் வாழ்ந்தேன்.
    I lived a long time with him or her as a snake with a mungoose.

  11. பாம்பு தன் பசியை நினைக்கும் தேரை தன் விதியை நினைக்கும்.
    The snake has regard to its hunger, the frog thinks of its fate.