Page:Tamil proverbs.pdf/457

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
439
  1. பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.
    It is impossible to comprehend the supreme Brahma.

  2. பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.
    Brahman matron, the cow has come.

  3. பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.
    As a brahman woman lost her salted mutton.

  4. பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.
    The service of a brahman, and the care of a white horse are bad.

  5. பார்ப்பானுக்கு வாய்போக்காதே ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே.
    Do not waste your breath on a a brahman, nor converse with a mendicant.

  6. பார்ப்பான் கறுப்பும் பறையன் சிவப்பும் ஆகாது.
    A black brahman, and a fair pariah are not trustworthy.

  7. பார்ப்பான் ஏழையோ பசு ஏழையோ?
    Which is the more helpless, a brahman or a cow?

  8. பாலருக்குப் பலம் அழுகை, மட்சத்துக்குப் பலம் உதகம்.
    The strength of a child is crying, and that of fish is water.

  9. பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.
    Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.

  10. பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.
    He has made enemies of all whose hearts are pure as milk.

  11. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
    He is the guard of the milk, and also the friend of the cat.

  12. பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?
    Will the cat that has come for new milk, drink buttermilk?