Page:Tamil proverbs.pdf/469

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
451
  1. புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.
    When the foolish go to wash, they will daub themselves with mud.

  2. புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.
    Even when kicked about and rolling in the dust, he affirms that his mustache did not touch the earth.

  3. புருஷன் அடிக்கக் கொழுந்தன் கோபித்ததுபோல.
    Like the younger brother of the husband, rebuking him for beating his wife.

  4. புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.
    The cloth covering the breast suited to the rank of her husband.

  5. புருவத்திற் பட்டால் கரிக்குமோ கண்ணிற் பட்டால் கரிக்குமோ?
    When does acid cause smarting, when it is applied to the eye-brow or the eyes?

  6. புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.
    Struck with fear before struck by the tiger.

  7. புலிக்குப் பிறந்து நகம் இல்லாமற் போகுமா?
    Being born a tiger, will it be without claws?

  8. புலிக்குத் தன் காடு என்ன வேற்றுக்காடு என்ன?
    What matters it to the tiger whether he is in his native jungle or another?

  9. புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?
    Being born a tiger, will it become a cat?

  10. புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டதுபோல.
    As the deer was caught among tigers.

  11. புலி செவி திருகிய மத களிறு.
    An elephant in rut whose ears were wrung off by a tiger.