Page:Tamil proverbs.pdf/477

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
459
  1. பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
    Having gone to take a wife, can you turn back because marriage is expensive?

  2. பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.
    For a wife, a mother-in-law, for a boy, a tutor.

  3. பெண்ணைக் கொடுத்தவளோ கண்ணைக் கொடுத்தவளோ?
    Did she give one a wife, or did she give one her eye?

  4. பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்றதாய் வேண்டாமோ?
    Are you content to lose your mother in order to pardon your wife?

  5. பெண்ணைக் கொண்டு பையன் பேயானான், பிள்ளைப் பெற்றுச் சிறுக்கி நாயானாள்.
    Having married a wife the boy has become a fool, having given birth to a child the damsel has become mean in appearance.

  6. பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு.
    If you want the woman, lick her bleared eyes.

  7. பெண் புத்தி கேட்கிறவன் பேய்.
    He who listens to the advice of women is a fool.

  8. பெண் புத்தி பின் புத்தி.
    The thoughts of women are after-thoughts.

  9. பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.
    The growing of women is that of a gourd creeper.

  10. பெரியாரைத் துணைக்கொள்.
    Secure the good will of the great.

  11. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
    All who are high in stature are not great.