Page:Tamil proverbs.pdf/478

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
460
பழமொழி.
  1. பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.
    When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.

  2. பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்க்குமுன் மரங்களைப்போல் வீழ்வார்கள்,
    If they should contradict the great, they will fall like trees before a flood.

  3. பெருங் கயிறு முடி அழுந்தாது.
    A tight knot cannot be formed in a thick rope.

  4. பெருங்காயம் இருந்த பாண்டம்.
    An earthen pot in which assafœtida was kept.

  5. பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.
    Flying like cotton before a gale of wind.

  6. பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.
    Though born in a high family, a fool is like a sugar-cane flower.

  7. பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.
    Beggars presume on large gifts.

  8. பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா?
    Will moisture affect a great fire.

  9. பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.
    Like a creeping plant-Dioscorea sativa-round a large tree.

  10. பெரு மழை விழுந்தாற் குளிராது.
    No feeling of cold in a heavy fall of rain.

  11. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு.
    As long as Perumal exists holy days will be observed.