Page:Tamil proverbs.pdf/479

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
461
  1. பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.
    The name Perumal being changed has become great Perumal.

  2. பெருமானைச் சேர்ந்தோர்க்கு பிறப்பு இல்லை, பிச்சைச் சோற்றிற்கு எச்சில் இல்லை.
    Those who have attained union with God are not subject to future births, rice given in alms is not refused because it is refuse.

  3. பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா, பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?
    If God is pleased, will there be any lack of prosperity, if Brahma favour, will one’s life be short?

  4. பெருமைதான் அருமையை குலைக்கும்.
    Pride will diminish one’s worth.

  5. பெருமையான தரித்திரன் வீண்.
    Pride in a poor man is vain.

  6. பெருமை ஒரு முறம் புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.
    When a sieve, full of pride, is sifted, nothing remains.

  7. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
    The great and the little come from the mouth.

  8. பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.
    He killed a sheep to show his greatness, and gave the ear to his child after roasting it.

  9. பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.
    The great are not always helpful, the lofty palmyrah casts no shade.