Page:Tamil proverbs.pdf/480

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
462
பழமொழி.
  1. பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்திற்கு நாள் இட்டுக் கொண்டான்.
    Not knowing that his wife is affected with dropsy, he has fixed upon a day for the performance of her simantham ceremony.
    A ceremony relating to the first pregnancy, including bathing, the parting of the hair in the middle of the forehead, putting on jewels, &c., &c.

  2. பெற்ற தாய் இடத்திலோ கற்ற வித்தை காட்டுகிறாய்?
    Do you practise your arts on your mother?

  3. பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
    If a mother dies, the father becomes uncle.

  4. பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்ததுபோல.
    Like feeding brahmans when one’s mother is starving.

  5. பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?
    Are all that are brought forth children, is all that is sown available for use?

  6. பெற்றது எல்லாம் பிள்ளையோ வளைந்தது எல்லாம் குசக்கலமோ?
    Are all that are brought forth children, is all earthen ware perfect that is fashioned by a potter?

  7. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
    The mother’s heart is soft, that of her child is as a stone.

  8. பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.
    The wise are not moved by relationship or anger.

பே.

  1. பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.
    Any language may be learnt by continual speaking.