Page:Tamil proverbs.pdf/481

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
463
  1. பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.
    No fault arises if nothing is spoken.

  2. பேசில் அபலம் பேசாக்கால் ஊமை.
    When he speaks it is to no purpose, when he does not speak he is accounted dumb.

  3. பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.
    A noisy dog is not fit for hunting.

  4. பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.
    In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.

  5. பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?
    Is contradiction becoming?

  6. பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.
    He sells his words, and cooks and drinks.

  7. பேடி கையில் இருந்த ஆயுதம் போல.
    Like a weapon in the hands of a hermaphrodite.

  8. பேடி கையில் வாள்போலே.
    Like a sword in the hands of a hermaphrodite.

  9. பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.
    He who is impartial is just.

  10. பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.
    Fools in the midst of a flood will wander about for water to drink.

  11. பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.
    Simplicity is the ornament of a woman.

  12. பேயானாலும் தாய், நீரானாலும் மோர்.
    Though like a demon she is a mother, though mere slop, it is buttermilk.