Page:Tamil proverbs.pdf/489

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
471
  1. பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
    Although you may throw away gold, you may not throw away edible herbs!

போ.

  1. போகா ஊருக்கு வழி கேள்.
    Inquire the way to the village whither you are not going.

  2. போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.
    If you go where you ought not, you will receive a cuff that might have been avoided.

  3. போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.
    An impudent person is greater than a king.

  4. போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
    A hungry dog finds a way wherever be goes.

  5. போசனம் சிறுத்தாலும் ஆசனம் பெருக்க வேண்டும்.
    Though one’s food be slight, the dish must be large.

  6. போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.
    Obey your religious teacher, approach not the house of the wicked.

  7. போதகருக்கே சோதனை மிஞ்சும்
    A religious teacher meets with many temptations.

  8. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
    A contented mind is a specific for making gold.

  9. போரில் ஊசி தேடின சம்பந்தம்.
    Akin to seeking a needle in a heap of straw.

  10. போரைக் கட்டிவைத்துப்போட்டுப் பிச்சைக்குப் போவானேன்.
    Having stacked your corn, why go abegging?