Page:Tamil proverbs.pdf/496

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
478
பழமொழி.
  1. மண்ணோடே பிறக்கலாம் உன்னோடே பிறந்ததில்.
    It were better to be born of the earth, than to be your brother.

  2. மண் பறித்து உண்ணேல்.
    Do not live by extortion.

  3. மண்பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை.
    Though earthen, one’s own child is precious.

  4. மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.
    Though the cat is made of mud, if it catch rats, it is enough.

  5. மண்வெட்டி கூதல் அறியுமா?
    Is a hoe sensible of cold?

  6. மண்வேலையோ புண்வேலையோ?
    Are you engaged in making earthen ware, or sores?

  7. மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.
    A child has neither the power of singing nor discretion.

  8. மதன மலைக்கு ஒப்பிடலாம்.
    He is comparable to Mathana mountain.

  9. மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.
    Love of father, caste, and country.

  10. மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.
    It is not well to tread even on the threshold of a house in which you are not respected.

  11. மதியும் உமது விதியும் உமது.
    Thy purpose and thy destiny.
    The settled judgment, and the decrees of God, are in harmony.

  12. மதியை மீன் சூழ்ந்ததுபோல.
    As the stars surround the moon.