Page:Tamil proverbs.pdf/501

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
483
  1. மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?
    Who created the affinity between the mountain nelli fruit, and sea-salt?

  2. மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழுகிறாளாம்.
    It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.

  3. மலைபோல வந்த்தெல்லாம் பனிபோல நீங்கும்
    All that has come upon thee like mountains, shall pass away as dew.

  4. மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.
    As a mountain amidst thunder brought forth a mouse.

  5. மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?
    Can the wild hog rush on these who are on the mountain top?

  6. மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.
    Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.

  7. மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?
    When a mountain becomes a sod, what will the sod be like?

  8. மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.
    Should a mountain fall, the head must bear it.

  9. மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.
    Like excavating a mountain and catching a rat.

  10. மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?
    After having chased and beaten him round a mountain, will it be difficult to do so round a bush?

  11. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
    Is not a small chisel sufficient to perforate a rock?