Page:Tamil proverbs.pdf/502

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
484
பழமொழி.
  1. மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.
    As if an adze and chisel came to perforate the rock.

  2. மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?
    If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?

  3. மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
    A rock supports a rock, can a sod do so?

  4. மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?
    Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?

  5. மலை விழுங்குதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
    Is a sod used as a chutney, to swallow a mountain?

  6. மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேலே.
    When one spits lying on his back, the spittle will fall on his breast.

  7. மவுனம் மலையைச் சாதிக்கும்.
    Silence may defy a mountain.

  8. மவ் இடப் பவ் ஆயிற்று.
    ம being elided, ப has appeared.

  9. மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?
    Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?

  10. மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?
    Who draws and pours water into the clouds?

  11. மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?
    Can you put up a hurdle to keep out the rain?

  12. மழைக்கோ படல், இடிக்கோ படல்?
    Is the hurdle to keep out rain, or the thunderbolt?