Page:Tamil proverbs.pdf/507

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
489
  1. மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
    If the dress of a mother-in-law be out of order, it must not be spoken of, or pointed at by the hand.

  2. மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.
    If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.

  3. மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதுபோல.
    As the son-in-law is embarrassed in the presence of his mother-in-law.

  4. மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் கண்ணீர் வந்ததாம்.
    It is said that six months after the death of the mother-in-law, a tear came into the eye of the daughter-in-law.

  5. மாமியார் செத்து மருமகள் அழுகிறதுபோல.
    Like the wailing of a daughter-in-law, on account of the death of her mother-in-law.

  6. மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?
    Will my mother-in-law never die, will my sorrows never end?

  7. மாமியார் வீடு மகா சௌக்கியம்.
    The house of the mother-in-law is very comfortable.

  8. மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.
    All impostors are perfidious villains, all double-dealers are practically so.

  9. மாயக்காரன் பேயிற் கடையே.
    A hypocrite is worse than a demon.

  10. மாரி அல்லது காரியம் இல்லை.
    Without rain nothing can be effected.