Page:Tamil proverbs.pdf/509

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
491
  1. மாவுக்கு தக்க பணிகாரம்.
    Cakes proportioned to the flour.

  2. மாவைத் தின்றால் அப்பம் இல்லை.
    If you eat the dough you will not get your ‘'share of'’ cake.

  3. மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?
    Will the tree be pliable because the sapling was so?

  4. மாற்றானுக்கு இடம் கொடேல்.
    Yield not to a foe.

  5. மானத்தின்மேலே கண்ணும் மாப்பிள்ளைமேலே சிந்தையும்.
    The eye is on the heavens, the mind is on the bridegroom.

  6. மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.
    He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.

  7. மானம் அழியில் உயிர் காவலா?
    When honour is perishing, is life worth preservation?

  8. மானம் பெரிதோ, சீவன் பெரிதோ?
    Is honour great, or is life?

  9. மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?
    Does the spacious earth refuse to uphold any one?

  10. மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?
    What matters it whether the deer has more or fewer spots?

  11. மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.
    Among mankind one destitute of humanity is as chaff.

  12. மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு.
    More beautiful than the eye of a deer, more rapid ‘'than its'’ speed.

  13. மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.
    As the tiger sprang on a herd of deer.