Page:Tamil proverbs.pdf/536

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
518
பழமொழி.
  1. வந்த வினை போகாது வாரா வினை வாராது.
    The evil that has betided one will not go, that which has not, will not come.

  2. வந்த அளவிலே சிறுக்கி பந்தடித்தாள், வரவரச் சிறுக்கி சோர்ந்து போனாள்.
    The damsel played at ball as soon as she came, in the course of time she became indolent.

  3. வந்தாரை வாழ வைக்கும், மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும்.
    It will cause strangers to flourish, and natives to decay and sink.

  4. வந்தாலும் சரி, போனாலும் சரி.
    It is all the same whether he comes or goes.

  5. வந்தாற் சும்மா வரும் வராமற்போனால் ஒன்றும் வராது.
    When good things come, they do so unsolicited; when they do not come, not one of them appears.

  6. வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.
    Bad words are an abomination to the mind.

  7. வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?
    Is it proper to make obeisance to a government, that rules with severity?

  8. வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.
    Does the becoming grey arise from age or from the hair?

  9. வயல் முயற்சியில் தானியம் உண்டாம்.
    The labour of the field brings grain.

  10. வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.
    As the physician wept at the head of the bed.

  11. வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டதுபோல.
    As the physician, after feeling the pulse, gave his opinion.