Page:Tamil proverbs.pdf/537

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
519
  1. வயித்தியன் கைவிட்டதுபோல.
    As given up by a physician.

  2. வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .
    A physician does not attain heaven, a teacher may.

  3. வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?
    Will enthusiasm induce one to swallow a razor?

  4. வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.
    No food for the stomach, nor cloth to for the waist.

  5. வயிறு நிரம்பினால் பானை மூடாள்.
    She will not cover the rice-pot if her belly is full.

  6. வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.
    If one should cut open his belly to prove his innocence, even then they would attribute it to jugglery.

  7. வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.
    He will walk as far as Vaidiswaran kòvil, if he can get a meal.

  8. வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.
    Although the entrails be shown to him, he says they ate only the fibre of the plantain tree.

  9. வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறிகொடுத்தாற்போல.
    As if one suffered herself to be deprived of her son, who was tending cattle, in anticipation of a child in the womb.

  10. வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.
    Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.