Page:Tamil proverbs.pdf/542

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
524
பழமொழி.
  1. வளர்ப்பு வக்கணை அறியாது.
    A hanger on does not understand politeness.

  2. வளவன் ஆயினும் அளவு அறிந்து அளித்து உண்.
    Though possessed of abundant wealth, be moderate in giving and eating.

  3. வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின்கீழ்.
    A bent bamboo above the king’s crown, a straight one under the feet of pole-dancers.

  4. வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.
    Decency in adversity is commendable in the indigent.

  5. வறுத்த பயறு முளைக்குமா?
    Will parched peas germinate?

  6. வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.
    There are many in the world who are accustomed to poverty.

  7. வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.
    When poverty comes, the ten vital airs will fly off.

  8. வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்.
    Adversity is attended by the goddess of misfortune, prosperity by the goddess of fortune.

  9. வனாந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.
    The sly jackals of the wilds, are inveterate enemies to shepherds.

  10. வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.
    Better is gentle resistance, than submission with rough words.