Page:Tamil proverbs.pdf/544

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
526
பழமொழி.
  1. வாணியன்‌ ஆசை கோணியும்‌ கொள்ளாது.
    A gunny bag will not hold the excessive desires of the oil merchant.

  2. வாணியர்கள்‌ ஆடும்‌ செக்கை வளைய வரும்‌ எருதுகள்போல.
    Like the oxen that go round the oil-man’s press.

  3. வாதத்து இயல்பு எடேல்.
    Do not indulge in rheumatic humour.

  4. வாதம்‌ கெடுத்தது பாதி வண்ணான்‌ கெடுத்தது பாதி.
    It was destroyed partly by the wind, and partly by the washerman.

  5. வாதம்‌ ஊதி அறி, வேதம்‌ ஓதி அறி.
    Learn alchemy by experiment, and the vedas by recitation.

  6. வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.
    To the eye of an alchemist, common gold appears as standard gold.

  7. வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றாள் கழுதை மேய்ப்பாள்.
    When a distinguished dancing girl becomes old, she may tend asses.

  8. வாதுமுற்‌ கூறேல்.
    Do not begin a quarrel.

  9. வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.
    The words of a babbler are fine dust.

  10. வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப்போல்
    Like a bat that feeds and ejects by the mouth.

  11. வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருசன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.
    Though you entreat, he will not give even an unripe plantain, but if the keeper of his mother comes, he will produce a whole bunch.

  12. வாயாலே கேட்டால் வாழைப்பிஞ்சும் கொடான் தண்டித்துக் கேட்டால் தாரோடே கொடுப்பான்.
    When entreated he will not give an unripe plantain, but when punished he will give a whole bunch.