Page:Tamil proverbs.pdf/548

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
530
பழமொழி.
  1. வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.
    Like placing a monkey in a family.

  2. வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு
    He is as a monkey in a house.

  3. வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.
    Ascertain the future of a family by putting down plantain trees.
    It is said that plantains naturally put forth their bunches to the north. Should the fruit appear otherwise, it is considered ominous to the homestead.

  4. வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.
    Length of days is in the hands of him who gave prosperity.

  5. வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.
    When that which flourished decays, it is not worth even a potsherd.

  6. வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஓட்டிற்கும் ஆகான்.
    If a prosperous person suffer reverses, he will not be worth a black potsherd.

  7. வாழ்ந்த மகள் வந்தால் வண்ணத் தடுக்கு இடு, கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு இடு.
    When the daughter who lives in affluence pays a visit, let be be seated on a fine mat; when she who is reduced to poverty comes, seat her on an old mat.

  8. வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.
    The goddess of fortune is in the mouth of the prosperous.

  9. வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.
    Prosperity for a time, and adversity for a time.

  10. வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மடடாய்ச் செலவிடு.
    Though you may acquire thousands of wealth by dexterity and physical strength, be frugal.