Page:Tamil proverbs.pdf/550

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
532
பழமொழி.
  1. விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.
    It is said that a devout cat carried away the dried fish.

  2. விஷத்தைக் குடிக்கப் பாலாமா?
    Will poison when drunk turn into milk?

  3. விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
    Poison is the medicine of poison.

  4. விஷம் தின்றால் கொல்லும்.
    If poison be swallowed, it will kill.

  5. விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.
    He who has swallowed poison must take pepper water.

  6. விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
    Though they may take poison, the faithful will not die.

  7. விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
    Which is the more destructive, poison or sin?

  8. விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
    A physician is necessary to counteract poison, and God, to remove sin.

  9. விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
    You must go to Srírangam to understand that Vishnu is great.

  10. விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்
    The inhabitants of Srírangam say that Vishnu is great, those of Arunasalam, say that Siva is great.

  11. விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
    Some profess that Vishnu is all in all, while others maintain that Siva is the greater of the two.