Page:Tamil proverbs.pdf/555

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
537
  1. விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.
    There are few on the face of the wide world who are wise.

  2. விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?
    Anxious for fame, may one crawl under bushes?

  3. விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?
    What, hunting, to acquire fame?

  4. விருத்தாசலம் போனால் திரட்பாவம் போகும்.
    Pilgrimage to Viruttáchalam will expiate great sins.

  5. விருந்து இட்டுப் பகை தேடுகிறது.
    Seeking enemies by means of hospitality.

  6. விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்
    The inhospitable are destitute of agreeable manners.

  7. விருந்து இல்லாச் சோறு மருந்து.
    Food without hospitality is medicine.

  8. விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.
    Win your enemy by hospitality.

  9. விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.
    Hospitality and medicine must be confined to three days.

  10. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
    Can that which is unattainable by ambition, be attained by mere boasting?

  11. விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
    Will the bottle gourd spring up when a different seed is sown?

  12. விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.
    Do not fret about disagreeables that cannot be averted.

  13. விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டதுபோல.
    Like being put in the stocks after liberation from chains.