Page:Tamil proverbs.pdf/557

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
539
  1. விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?
    Why put your hand on a tottering wall?

  2. விழுங்கின ரசம் வயிற்றில் இராது.
    Swallowed mercury will not remain in the stomach.

  3. விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.
    No time to lift up the child that has fallen down.

  4. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.
    Though he has fallen down, he says that his mustache is not soiled with dust.

  5. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
    What, a silk tassel for a broom?

  6. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.
    The child did not survive,—it was only waste of oil.

  7. விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.
    Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.

  8. விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.
    It is said that what he uses for the head is lamp-oil.

  9. விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?
    What, falling into a well with a lighted lamp in the hand?

  10. விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?
    Does any one place a lighted lamp on the floor?

  11. விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.
    Like wandering abroad for fire, while there is a lighted lamp in the house.

  12. விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.
    Like a grass-hopper fascinated by a lighted lamp.