Page:Tamil proverbs.pdf/561

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
543
  1. வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.
    An earthen hearth is the rule in all houses.

  2. வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.
    A wife gives beauty to a house.

  3. வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.
    Grain gives beauty to a house.

  4. வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கைக்காய்.
    A cow is house-wealth, and murungai fruit is garden-wealth.

  5. வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?
    Why go and quarrel causelessly when eating your own rice?

  6. வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?
    Having given his own rice why should one hear abuse?

  7. வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.
    If a tamed snake go to the jungle, it will become a wild one.

  8. வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.
    After finishing house work and out door work, one should go to that of the jungle with due preparation.

  9. வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.
    Children in one’s own, house and strange children make no difference.

  10. வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகிறது.
    The house-goddess of misfortune, and one of the wilds are walking together.

  11. வீட்டுக்குப் புகழ்ச்சியோ நாட்டுக்குப் புகழ்ச்சியோ?
    Is it fame to a family or to the country?

  12. வீட்டுக்காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?
    Will he who cannot manage his own household affairs, attend to the management of a country?