Page:Tamil proverbs.pdf/564

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
546
பழமொழி.
  1. வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.
    Fools are extravagant through mere perverseness.

  2. வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.
    A useless shrub growing on a rubbish-heap of ostentation.

  3. வீம்புக்கு வேடம் கொள்ளாதே.
    Do not assume a garb for mere show.

  4. வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.
    A boaster will be ruined, he who talks as a hero will fall.

  5. வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?
    May a soldier who defiantly rose to the combat, retreat in sight of the battle field?

  6. வீரன் கேண்மை கூர் அம்பாகும்.
    The friendship of a hero, is a sharp arrow.

  7. வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?
    Which is the greater boasting or acting?

வெ.

  1. வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து.
    Give your eyes in exchange for white-eyed fish.

  2. வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்
    The sayings of the many involve duty.

  3. வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?
    Can butter be melted without heat?

  4. வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.
    It matters little if his honour is at stake, it is enough if his paunch be filled.