Page:Tamil proverbs.pdf/567

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
549
  1. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.
    As an elephant entered a brass vessel bazaar.

  2. வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.
    When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.

  3. வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?
    Having butter, would you weep for ghee?

  4. வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.
    As the churn broke just as the batter was forming.

  5. வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.
    Ere butter can melt, freshes appear in the Pennar.

  6. வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.
    He eats his rice, and talks at random.

  7. வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது
    Hating one’s rice, and dying when the time comes.

  8. வெந்ததுபோதும் முன்றானையிலே கொட்டு.
    It is boiled enough, put it into the end of my cloth.

  9. வெந்ததைப் போடு முன்றானையிலே
    Put what is boiled into my cloth.

  10. வெந்த புண் வினை செய்யாது.
    No evil consequences can arise from a burn.

  11. வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.
    A curry with vendayam in it needs not be questioned.

  12. வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல, சந்தை இல்லாத ஊரும் ஊர் அல்ல.
    A curry made without vendayam-Trigonella Fœnum Grœcum-is not a curry, a village without a market is not a village.