Page:Tamil proverbs.pdf/569

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
551
  1. வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி
    The exterior is the mirror of the interior.

  2. வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்
    Every thing white is milk, and every thing black is water.

  3. வெளுத்து விட்டாலும் சரி சும்மா விட்டாலும் சரி.
    It will be all the same whether he is punished or let go.

  4. வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.
    The flood inclines to a hollow, fate follows the intention.

  5. வெள்ளம் வருவதற்குமுன் அணை கோலிக் கொள்ளவேண்டும்.
    One should raise the dam before the flood comes.

  6. வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.
    The city where cucumbers were sold.

  7. வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.
    It is said that the tiger is fallen down and crying for grief because the goat was wet.

  8. வெள்ளாடு குழை தின்றதுபோல.
    As the goat crops leaves.

  9. வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.
    If a servant girl, be possessed of a devil, all must fall down before her.

  10. வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று
    The child brought forth by a servant girl, died at sunrise.

  11. வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?
    Are a maid servant and a wife, on an equality?