Page:Tamil proverbs.pdf/570

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
552
பழமொழி.
  1. வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.
    Of all ranks that of the Vellala is foremost, of thefts that of the Kallar is notorious.

  2. வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.
    If the Vellala did not procure your ruin, his white olas will destroy you.

  3. வெள்ளாளன் மினுக்குப்பண்ணிக் கெட்டான், வேசி சளுக்கும் பண்ணிக் கெட்டாள்.
    The Vellala was ruined by adornment, the harlot by finery.

  4. வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.
    The Sanscrit of a Vellala, and the Tamil of a brahman, are equally faulty.

  5. வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.
    Agriculture not performed by Vellalas, is no agriculture.

  6. வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.
    A Kallála family in a Vellála house.

  7. வெள்ளிக்கு எதிரே போனாலும், வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது.
    One may go before an evil star, but not before a Vellalan.

  8. வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.
    Money laid out on silver ornaments, and that spent for firewood are equally a loss.

  9. வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?
    Is a naked foot, the slave of a foot wearing silver ornaments?

  10. வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.
    I must have a silver platter with a rim of gold.