Page:Tamil proverbs.pdf/572

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
554
பழமொழி.
  1. வெறும் புளி தின்றால் பற் கூசும்.
    Tamarinds if eaten alone, will set the teeth on edge.

  2. வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.
    As flies entered an empty pot.

  3. வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.
    Arrogance suited to one’s worthlessness.

  4. வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.
    Finery borrowed from a washerman.

  5. வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.
    If a worthless fool go out to gather firewood, he cannot procure a creeper, when he gets a creeper, he can find no firewood.

  6. வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.
    As a measure of bruised dried rice given to an old dame, who had nothing to chew but an empty mouth.

  7. வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல
    As one who had nothing to eat but an empty mouth obtained bruised rice.

  8. வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.
    He who has conquered is a perfect hero.

  9. வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.
    Like water to the betel creeper, and saffron to a prostitute.

  10. வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.
    Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.