Page:Tamil proverbs.pdf/576

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
558
பழமொழி.
  1. வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.
    The world is at enmity with the Vedas, and wisdom with the world.

  2. வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை.
    It is the duty of religious teachers to study the Vedas before teaching them.

  3. வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது.
    Though the Vedas may fail, Jupiter will never fail.

  4. வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்?
    Why call those Védiar, who have heard the Vedas?

  5. வேதம் ஏன் நாதம் ஏன் விஸ்தாரக் கள்ளருக்கு?
    What need has a widely known hypocrite of the Vedas or the special forms of worship?

  6. வேதம் ஒத்த மித்திரன்.
    A friend whose conduct is consistent with the precepts of the Vedas.

  7. வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.
    One rain (in a month) for the brahmans that expound the Vedas.

  8. வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியச்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.
    At Védaranyam snakes do not bite, nor do they cease to abound.

  9. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.
    The Vedas and virtue, form the beauty of the brahmans.

  10. வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.
    It is the office of brahmans to expound the Vedas.

  11. வேந்தனும் பாம்பும் சரி .
    A king and a snake are alike.

  12. வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.
    No help if the king is angry.