Page:Tamil proverbs.pdf/580

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
562
பழமொழி.
  1. வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுக்காரியானால் அவள் அதிஷ்டம்.
    If a maid servant becomes the mistress of a house, it is her fortune.

  2. வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
    Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was a married girl.

  3. வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூர்மை.
    Hire suited to the work, sharpness equal to the desires.

  4. வேலைக்கோ சம்பளம், ஆளுக்கோ சம்பளம்?
    Is the hire for the labour, or the labourer?

  5. வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு
    If the work be completed, hire; if the character has been sustained, a fee.

  6. வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.
    Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.

  7. வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.
    Being without work, the barber is said to have shaved his head.

  8. வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.
    It is said that a barber wasted his time by shaving a kitten.

  9. வேலை முத்தோ பிள்ளை முத்தோ?
    Is the work a pearl, or the child a pearl?

  10. வேலையைப் பார்த்துக் கூலி கொடு.
    Look at the work before you pay the hire.